Click here to participate in AKAM (Azadi ka Amrit Mahotsav) Events between Oct 1 to 3

A- Decrease font size. A Reset font size. A+ Increase font size.

புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா

மோளகவுண்டம்பாளையத்தில், மாநகராட்சி ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சாலை உள்ள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், சாலை விதிமுறைகள், சாலையோரம் குறியீட்டுக்கான விளக்கம், வாகன ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பொதுமக்கள் ஆகியவற்றை எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட தற்போது ஒளிரும் ஈரோடு இப்பூங்கா, பவுண்டேஷன் சார்பில் அமைப்பின் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, பூங்காவை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் திறந்து வைத்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாநகராட்சி, ஆணையாளர் மனிஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் சக்திவேல் எஸ்கேஎம் பூரண ஆயில் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் மற்றும் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, நிகழ்ச்சியில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி வரவேற்புரையாற்றினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன