இன்று (29.11.2021)
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (30.11.2021)
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை:
இன்று(29.11.2021): கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(30.11.2021): கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பு:
http://imdchennai.gov.in/tn_fc.pdf
http://www.imdchennai.gov.in/hrw_district.htm