மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையின் மதகுகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 120 அடியை எட்டுவதற்கு இன்னும் ஒரு அடி மட்டுமே உள்ள நிலையில், மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மதகுகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ( 11 தமிழக மாவட்டங்களுக்கு) வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக நீர்வரத்து சீராக இருப்பதால், மேட்டூர் அணை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இன்று இரவுக்குள் அதன் FRL எல்லையை எட்டும் எனவும்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள நிர்வாகங்களை உஷார் நிலையில் இருக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றவும், மக்கள் ஆற்றில் இறங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஈரோடு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.